கேலக்ஸி சிரீஸில் வெளி வரும் சாம்சங் மொபைல்கள் வாடிக்கையாளர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட புதிய சிடிஎம்ஏ ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது சாம்சங் நிறுவனம். இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜெர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கியூவள்காம் எம்எஸ்எம் 7627-3 சிப்செடும், 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிகராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் 3.2 இஞ்ச் திரை 320 X 480 மெகா பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் பிரைமெரி கேமராவும், செகன்டரி கேமராவும் உள்ளது. இதனால் சிறந்த புகைப்படம், வீடியோ எதுவாக இருப்பினும் அழகாக எடுக்கலாம். இந்த புதிய கேலக்ஸி சிரீஸ் ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொண்டதாக இருக்கும்.
இதில் உள்ள 2 மெகா பிக்ஸல் கேமரா, 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தினை தரும். இதனால் போதுமான அளவு துல்லியம் கொண்ட புகைப்படத்தினை பெற முடியும். 117எம்பி இன்டர்னல் மெமரி வசதியும், 2ஜிபி வரை எக்ஸ்டர்னல் வசதியும் உள்ளது. இதனால் சுலபமாக தகவல்களை ஸ்டோர் செய்யலாம். இதில் 1,500 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி உள்ளது. இதனால் 6 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைம் வசதியினை எளிதாக பெறலாம்.
பொதுவாக ஸ்மார்ட்போன் எந்த தொழில் நுட்பம் கொண்டதாக இருப்பினும் அதன் விலை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கேலக்ஸி வரிசையில் வெளியாக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ,10,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.

0 comments:
Post a Comment