வடிவமைப்பு, ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிராசஸர், சிப்செட் என்று அனைத்திலும் சிறப்பான வசதிகளை வழங்கி கொண்டு இருக்கிறது சாம்சங். ஐ-9500 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அதிக விவரம் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த ஐ-9500 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சில வெப் சைட்களி்ன் வழியாக கசிந்துள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் புதிய டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய டைசன் ஓஎஸ் இன்டல் நிறுவனத்தின் தயாரிப்பு. இதனால் இந்த சாம்சங் ஜிடி-ஐ-9500 ஸ்மார்ட்போன் வடிவமைப்பிலும், தொழில் நுட்ப வசதியிலும் வாடிக்கையாளர்களின் மனதில் தனித்தன்மையான இடத்தை பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜிடி-ஐ-9500 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் சாம்சங் முன்நிலை வகிக்கும் சில முக்கிய நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறும். இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரத்தினையும் பெற இன்னும் சற்று காத்திருக்க வேண்டி இருக்கிறது.

0 comments:
Post a Comment