மக்களிடையே நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஸ்மார்ட்போன்கள். புதிய நவீன மாற்றங்களை கொண்டு வந்ததில் அல்கேட்டல் நிறுவனத்திற்கும் அதிக பங்கு இருக்கிறது. அல்கேட்டல் அல்ட்ரா-995 என்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. 2012 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் அல்கேட்டல் நிறுவனமும் பங்கேற்றுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனான அல்ட்ரா-995, ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இது சிறப்பான திரை வசதியை கொண்டுள்ளது. 4 இஞ்ச் அகன்ற பிரம்மாண்டமான திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 1 ஜெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிராசஸர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க பெரியளவில் பயன்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் அனைவரையும் கவரும் டிஎல்என்ஏ கேமிங் வசதி உள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும், 3ஜி தொழில் நுட்ப வசதியையும் பெறலாம். இதில் உள்ள வைபை வசதியை ஸ்மார்ட் டிவியில் இணைத்து கேம் விளையடும் ரிமோட்டாக பயன்படுத்தலாம். இப்படி இதில் உள்ள ஒரு சில வசதிகளை கேட்கும் போதே இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றும்.
அல்ட்ரா-995 ஸ்மார்ட்போன், ஆசிய நாடுகளில் தான் முதலில் வெளியாக உள்ளது. இன்னும் இதன் முழு வசதிகளும் தெரிய வந்தால் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணம் இன்னும் அதிகமாகிவிடும். இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரமும், விலையும் வெளியிடும் வரை சற்று காத்திருக்க வேண்டியதாய் உள்ளது.

0 comments:
Post a Comment