
பொதுவாக ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பயணிகள் மொபைல் போன்களை பயன்படுத்துவது அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இப்போது வெர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் தமது பயணிகளை பயணத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்த அனுமதிக்க இருக்கிறது.
இந்த வசதியின் மூலம் இனி வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் எ330 ஏர்பஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயணத்தின் போது தங்கள் மொபைல் போன்களை இயக்கலாம். அழைப்புகளை விடுக்கலாம். வரும் அழைப்புகளை எடுக்கலாம். எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். எஸ்எம்எஸ்களைப் பெறலாம். இமெயிலை சரிபார்க்கலாம். அதுபோல் இமெயில்களை அனுப்பலாம். அதுபோல் இணைய தளத்தை இயக்கலாம்.
மேற்சொன்ன எல்லா வசதிகளையும் எ330 ஏர்பஸ் விமானங்களில் இருக்கைகளுக்குள் இருக்கும் ஜெனரல் பாக்கட் ரேடியோ சேவை மூலம் பெறலாம். இந்த சேவையை தனது போயிங் 747 விமானங்களுக்கும் விரிவுபடுத்த வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
விமான பயணத்தின் போது மொபைல்களை பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே இந்த வசதியை வழங்குவதாக வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைமை அலுவலர் திரு. ஸ்டீவ் க்ரிபித்ஸ் கூறுகிறார்.
இந்த சேவையை அனுபவிக்க பயணிகள் சற்று கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதாவது இந்த மொபைல் சேவைகளை ஒரே நேரத்தில் 6 பேர் பயன்படுத்த நிமிடத்திற்கு 1.20 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறது வெர்ஜின் அட்லாண்டிக்.
எனினும் அவசரத்திற்கு இந்த சேவை கட்டாயமாகிறது. இந்த சேவை மக்களை மகிழ்விக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment