இன்றைய தலைமுறையில் உள்ள குழைந்தைகளுக்கு எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் மீது பெரிய ஈர்ப்பு உள்ளது உண்மை தான். இதை மனதில் கொண்டு ஆர்கோஸ் நிறுவனம் குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக சைல்டுபேட் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இது குழந்தைகள் கைக்கு அடக்கமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை குழந்தைகள் எளிதாக
கையாள முடியும். குழந்தைகள் பயனபடுத்துவதற்காக இருந்தாலும் இந்த சைல்டுபேட் ஆன்ட்ராய்டு 4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங்சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் குழைந்தைகள் உயர்ந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பழக இது ஓர் அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டு்ம்.
இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் உள்ளது. ஆர்கோஸ் சைல்டுபேட் 7 இஞ்ச் திரை எல்சிடி திரை தொழில் நுட்பத்தினையும் வழங்கும். பயன்படுத்தும் போது ஷாக் அடிப்பது போன்ற பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக இந்த சைல்டுபேட் ப்ளாஸ்டிக் பெசல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் பெரிதும் கவர்ந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேமும் இதில் உள்ளது. புதுவிதமான ஓர் அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும் இந்த ஆர்கோஸ் சைல்டுபேட் ரூ.6,500 விலை கொண்டதாக இருக்கும். சைல்டுபேட் இந்த மாதத்தின் கடைசியில் மின்னணு சாதன மார்கெட்களில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment