கடும் சர்ச்சைகளுக்கு பின்னர் பிளாக்பெர்ரி மொபைல் நிறுவனம் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தனது சர்வரினை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது. கனடா நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெர்ரி, உலக மொபைல் சந்தையி்ல் முன்னேறி வருகிறது. இந்தியாவிலும் கால்பதித்து உள்ளது. இது போன்ற வெளிநாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உள்நாட்டுபாதுகாப்பு காரணங்களுக்காக சில விதிமுறைகளை வகுத்துள்ளன.
இதன்படி செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை. இதன்படி வெளிநாட்டு தயாரிப்பு மொபைல்களில் வெளியாகும்,மின்னஞ்சல்,எஸ்.எம்.எஸ்களை இடைமறித்து தகவல் கேட்கும் வசதியினை இந்தியாவில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
முதலில் பிளாக்பெர்ரி எதிர்ப்பு தெரிவித்தது.பின்னர் சம்மதம் தெரிவித்தது. இதன்படி பிளாக்பெர்ரி தனது சர்வரினை இந்தியாவின் மும்பையில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியினை உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த ஆராயச்சித்துறையினர், இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகளை சந்தித்து பேச உள்ளனர்.

0 comments:
Post a Comment