ஒடிசா மாநிலத்தில் வானத்தில் பறந்த சில சிறிய பறவைகள், மொபைல் போன் கோபுரங்கள் வட்டத்தில் பறக்கும் போது செத்து விழுந்தன என்ற தகவல் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது. இந்த கோபுரங்கள் தற்போது சுற்றுப் புறஸ் சூழ்நிலை மற்றும் காடுகளுக்கான அமைச்சகத்தின் கண்காணிப்புப் பார்வையில் வந்துள்ளன.
மொபைல் போன் கோபுரங்களிலிருந்து வரும் கதிர் வீச்சு, பறவைகளைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானதா என்று அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.
ஏற்கனவே தேனீக்களை இந்த கதிர்கள் கொல்கின்றன என்று ஓர் ஆய்வு உறுதி செய்தது. எனவே மொத்தத்தில் விண்ணில் பறக்கும் உயரினங்களை, இந்த மொபைல் டவர்கள் அழிக்கும் சக்தியைக் கொண்டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற வாரம் தொடங்கிய இந்த ஆய்வு மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment