பயன்படுத்தும் மொபைல்கள் எல்லா விதத்திலும் சவுகரியத்தினை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதற்கு தகுந்தாற்போல் 3 சிம் கார்டுகள் பொருத்திக்கொள்ளும் வசதியை கொடுக்க இருக்கிறது எல்ஜி.
ஏ-290 என்ற மொபைலை ரஷியாவில் அறிமும் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். இது 3 சிம் கார்டு வசதி கொண்ட மொபைல். இதனால் ஒரே நேரத்தில் மூன்று நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும்.
அதிகம் பயணம் செய்பவர்களுக்கு இந்த எல்ஜி ஏ-290 மொபைல் வசதியாக இருக்கும். அலுமினியம் பேனல் கொண்டு இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் பின் புறத்தில் 1.3 மெகா பிக்ஸ்ல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொழில் நுட்ப வசதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகவில்லை. இந்த மொபைல் ரஷியாவில் இந்த மாதம் வெளியாக உள்ளது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருக்கும் நோக்கியா நிறுவனம், ரஷியாவிலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய எல்ஜி ஏ-290 மொபைல் ரஷியாவில் வெளியானால், டியூவல் சிம் வசதி கொண்ட நோக்கியா மொபைல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்றும், இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் மொபைல் மார்கெட்டில் அறிமுகமாகவில்லை.

0 comments:
Post a Comment