நியூயார்க் : ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் பிசிக்கள் வந்ததோடு மட்டுமல்லாது, தற்போது இந்த ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டு உபயோக சாதனங்களையும் அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் தயாராகி உள்ளன. இதுதொடர்பாக, கூகுள் நிறுவன செயற்குழு தலைவர் எரிக் ஷ்மிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை, அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கேற்ற வகையில் பயன்படுத்த ஏதுவாக ஓபன் சோர்சில் விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சில முன்னணி நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இந்த அறிமுகங்கள் மற்றும் புதுமுகங்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment