தனது தொழில்நுட்பம் மற்றும் மதி நுட்பத்தால் வாடிக்கையாளர்களை கவர சாம்சங் நிறுவனம் முடிவு செய்தருக்கிறது போலும். புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்டார்-3 மற்றும் ஸ்டார்-3 டியோஸ் என்ற இரண்டு மொபைல்களை வெளியட இருக்கிறது. இந்த இரண்டு மொபைல்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றது.
ஸ்டார்-3 மற்றும் ஸ்டார்-3 டியோஸ் மொபைல்களில் டியூவல் சிம் நெட்வொர்க் வசதியினை பெறலாம். இந்த மொபைல்கள் 3 இஞ்ச் கியூவிஜிஏ எல்சிடி திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இது 3.2 மெகா பிக்ஸல கேமரா மூலம் சிறந்த புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். 16ஜிபி வரை மெமரி வசதி உள்ளதால், நிறைய தகவல்களை இதில் ஸ்டோர் செய்ய முடியும்.
இந்த இரண்டு மொபைல்களுமே சிறந்த எட்ஜ் தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும். பல கவர்ச்சிகரமான வசதிகளை கொண்ட இந்த மொபைல்கள் கவர்ச்சிகரமான விலை கொண்டதாகவும் இருக்கும். இந்த 2 மொபைல்களுமே ஜனவரி மாதத்தில் வெளியாகும்.

0 comments:
Post a Comment